சிக்கன் கொத்து பரோட்டா செய்து பாருங்கள்
Mugunthan Mugunthan
3 years ago
ஹோட்டல்களில் சாப்பிடும் பலர், பெரும்பாலும் சிக்கன் கொத்து பரோட்டா சாப்பிடுவது வழக்கம். சிக்கன் கொத்து பரோட்டா என்றாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு சிக்கன் கொத்து பரோட்டாவின் சுவை அருமையாக இருக்கும். அதே ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் கொத்து பரோட்டாவை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
சிக்கன் கொத்து பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 200கிராம்,
- முட்டை – 3,
- வெங்காயம் – 1,
- தக்காளி – 1,
- பச்சை மிளகாய் – 3,
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீ ஸ்பூன்,
- மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன், கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்,
- மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன்,
- தனியா பொடி – 1 டீ ஸ்பூன்,
- பரோட்டா – 5,
- சிக்கன் குழம்பு – அரை கப்,
- எண்ணெய் – 2 டீ ஸ்பூன்,
- கடுகு – சிறிதளவு,
- கருவேப்பிலை – 15 இலைகள்
- கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை:
- கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பிறகு கடுகு சேர்க்க வேண்டும்.
- கடுகு பொரிந்த உடன் அதில், வெட்டிவைத்துள்ள வெங்காயம் சேர்த்து, அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும்.
- பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியா பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- மசாலா ஓரளவிற்கு வதங்கிய பின்னர், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- தக்காளி வதங்கிய பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் சேர்த்து, அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- சிக்கன் நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- முட்டை பாதி வெந்த சமயத்தில், சிறி சிறு துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- பிறகு இதில் அரை கப் அளவிற்கு சசிக்கன் குழம்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- அனைத்தும் நன்றாக கலந்து சாப்பிடும் பதத்திற்கு வந்ததும் அதில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
- அவ்வளவு தான் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா ரெடி.