ஆந்திரா கோழிக்கறி வறுவல் சமைத்து பாருங்கள்
Mugunthan Mugunthan
3 years ago
தேவையான பொருட்கள்:
- கோழிக்கறி - அரை கிலோ
- சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
- பொட்டுக்கடலை மாவு - ஒரு கையளவு
- காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
2. பின் வெங்காயத்தையும் அதன் பின் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் சிக்கனைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், போதுமான உப்பு, நீர் சேர்க்கவும்.
4. சிக்கன் மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்து கெட்டியானதும் மிதமான தீயில் சிறிது நேரம் வைக்கவும்.
5. சிக்கன் நன்கு ட்ரை ஆனதும், பொட்டுக்கடலை மாவைப் போட்டுப் பிரட்டவும், உடைத்த கடலைத் தூளில் பச்சை வாசனை போனவுடன் இறக்கிவிடவும்.
6. சுவையான ஆந்திரா கோழிக்கறி வறுவல் ரெடி