மல்வானி ஃபிஷ் கறி சமையுங்கள்
Mugunthan Mugunthan
3 years ago
என்னென்ன தேவை?
- மீன் - 1/2 கிலோ,
- துருவிய தேங்காய் - 2 கப்,
- மஞ்சள் தூள் - 1½ ஸ்பூன்,
- காய்ந்தமிளகாய் - 8,
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
- கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
- பூண்டு பல் - 6,
- வெங்காயம் - 1,
- கோகம் புளி - 8 துண்டுகள்,
- உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மீனை சுத்தம் செய்து 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 20 நிமிடம் மாரினேட் செய்யவும். தேங்காய்த்துருவல், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், காய்ந்தமிளகாய், பாதி வெங்காயம், கொத்தமல்லித்தழை, பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மீதியுள்ள பாதி வெங்காயத்தை நறுக்கி நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொதிக்க விடவும். கொதித்ததும் மீன் துண்டுகளை போட்டு மூடி வைத்து வேகவைக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.