இன்றைய வேத வசனம் (24.08.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள், கர்த்தர் செய்த நன்மைகள் யாவும், ஆசீர்வாதம் என்று எண்ணு ஒவ்வொன்றாய் ' என்று பக்தன் பாடுகிறான்.
அனுபவம்
ஒரு சகோதரிக்கு முதுகு எலும்பில் ஒரு கோளாறு ஏற்பட்டது. நிற்கவோ, நடக்கவோ முடியாதபடி ஒரு பெட்டிக்குள் அசையாதபடி வைத்து, பெட்டியோடே இணைத்து பெல்ட்களினால் கட்டியிருந்தார்கள்.
மாதக்கணக்கில் அப்படியே இருக்க வேண்டிய நிர்ப்பாக்கியத்தில், அந்த சகோதரியின் விசுவாசம் எப்படியிருக்கிறது என்று அறிய விரும்பி, போதகர் அந்த சகோதரியின் வீட்டிற்கு வந்தார்.
அந்த இரவு வேளையில் அவள் ஜன்னல் ஓரமாக அந்தப் பெட்டிக்குள் படுத்துக்கொண்டே நட்சத்திரங்களைப் பார்த்து பார்த்து துதித்துக் கொண்டிருக்கக் கண்டார்.
சகோதரி சொன்னார்கள், அதோ, அந்த பிரகாசமான நட்சத்திரம் தான் என் தகப்பனார். அதற்கடுத்து என் தாயார், கர்த்தர் அவர்களை எனக்குத் தந்தபடியால் நான் தேவனைத் துதிக்கிறேன்.
கீழே இருக்கும் நட்சத்திரம் என் அக்கா. இதோ, இதுதான் என் டாக்டர், என் நாய்க்குட்டி, என் பூனை.. அவள் ஒவ்வொன்றுக்காய் துதித்துக் கொண்டே, சொல்லிக்கொண்டே போனாள். அவள் துதிப்பதற்கு வைத்திருக்கும் காரியங்களைப் பார்த்தால் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் போதவே போதாது.
நீங்கள் சுவாசிக்கும் இந்தக் காற்று, பார்க்கும் இந்த வெளிச்சம், பூக்களின் நறுமணம், பறவைகளின் இனிமையான பாடல்கள். சொல்லிக்கொண்டே போகலாம்.
வசனம்
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நீங்களோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை துதியுங்கள். அல்லேலூயா. (சங்கீதம் 115:17-18)
#எபிரெயர் 13:15
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.