இன்றைய வேதவசனம் (26.8.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஒரு விசுவாசி இவ்விதமாய் எழுதுகிறார். யார் யாருக்கு ஜெபிக்கும் தாய் இருக்கிறார்களோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ஜெபிக்கும் தாயின் ஜெபத்தால், வளரும் பிள்ளைகள் பாக்கியவான்கள். கர்த்தருடைய வழிகளிலே, உத்தமமாய் வளர்க்கப்படும் பிள்ளைகள் பாக்கியவான்கள்.
ஆம், நிச்சயமாகவே தாயின் ஜெபம், குழந்தையை மேன்மைப்படுத்தும், அறிவில் சிறந்தவனாக்கும், புகழ் பெற்றவனாய் நிலைநிறுத்தும்.
அனுபவம்
மிகச்சிறந்த ஊழியரான ஹட்சன் டெய்லர், நான் என் தாயின் ஜெபத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், நான் உலகத்தின் உல்லாசத்தில் வாழ விரும்பி, கெட்ட நண்பர்களோடு ஐக்கியம் கொள்ள விரும்பியும், என்னால் முடியாமற்போனதின் காரணம், என் தாயின் ஊக்கமான உருக்கமான ஜெபமே!
"நான் இந்த நாளில், இந்த மணி நேரத்தில் இரட்சிக்கப்படுவேன்" என்பது போன்ற எல்லா விவரத்தையும் என் தாயாருக்கு கர்த்தர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதலால் நான் இரட்சிக்கப்பட்டேன் என்ற செய்தியை ஓடோடி வந்து, என் தாயாரிடம் அறிவித்தபோது அவர்கள் ஆச்சரியப்படவே இல்லை.
இளம் தீமோத்தேயு நற்சாட்சி பெற காரணம் என்ன? அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். (2 தீமோத்தேயு 1:5) என்று பவுல் எழுதுகிறார்.
ஜெபிக்கிற குடும்பம் தேவ கிருபையால் நிரப்பப்படும்.. ஆமென்
வசனம்
அன்னாள், "இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்." சாமுவேல் 1:27