விநாயகர் சதுர்த்திக்கு படையெடுக்கும் பட வெளியீடுகள்
#TamilCinema
#Cinema
Mugunthan Mugunthan
3 years ago
கொரோனா இரண்டாவது அலை பிரச்னையால் தியேட்டர்கள் நீண்ட நாட்களாக மூடிக் கிடந்த நிலையில் தற்போது 50 இருக்கைகள் அனுமதி உடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் புதிய படங்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே ரிலீசான படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10 வருகிறது. விடுமுறை காலம் என்பதால் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமான செப்., 9ல் பல படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் விஜய் சேதுபதியின் லாபம் படம் செப்., 9 அன்றும், செப்., 10ம் தேதி கங்கனாவின் தலைவி படமும் வெளியாகிறது. இதுதவிர மேலும் 4 படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.