படப்பிடிப்பின்போது திருடு போன பாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கார்
ஹாலிவுட் படங்களில் வசூலை வாரி குவித்த படம் மிஷன் இம்பாஷிபிள். இந்த படத்தின் 7-வது பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பிரிட்டன் நாட்டில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 என்ற கார் திருடப்பட்டது. மேலும், ஆயிரம் பவுண்ட்ஸ் மதிப்புள்ள அவரது உடமைகளும் திருடப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 என்ற ஆடம்பர கார் பர்மிங்காமின் கிராண்ட் ஹோட்டலுக்கு வெளியே திருடப்பட்டதாக கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து வாகனம் மாயமானதை நடிகரின் மெய்க்காப்பாளர் கவனித்தபோது புதன்கிழமை கார் திருடுபோனது தெரிய வந்தது.
டாம் குரூசின் வாகனத்தில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டதால் காவல் துறையினர் வாகனத்தை மீட்டனர். கார் மீட்கப்பட்டாலும் அதிலிருந்த உடமைகள் அனைத்தும் திருடு போயுள்ளன.