மகள்களுடன் சென்று ரவிசங்கர் ஜீயை சந்தித்த சூப்பர் ஸ்டார்.
வழக்கமாக ஒரு படத்தின் வேலைகளை முடித்த உடன், அமைதிக்காக இமயமலை பறந்து விடுவது தான் ரஜினியின் வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் இந்த முறை இமயமலை செல்லாமல் பெங்களூருவில் உள்ள வீட்டில் ரஜினி தியானத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது இரு மகள்களான ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்துடன் சென்று ஆன்மிக குரு ரவிசங்கர் ஜியை சந்தித்த ஃபோட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி, தீயாய் பரவி வருகிறது.
இந்த ஃபோட்டோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவருமே இந்த ஃபோட்டோவை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளனர். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
ஏராளமானோர் ஒரு தலைவர் மற்றொரு தலைவரை சந்தித்துள்ளார், அருமையான ஃபோட்டோ என கமெண்ட் செய்து வருகின்றனர். ட்விட்டரில் பலர் இதை ரீட்வீ ட் செய்து வருகின்றனர். எப்போது, எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என தெரியவில்லை.
ரஜினிகாந்த்தின் இளைய மகளான செளந்தர்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தான் இது பற்றிய தகவலை வெளியிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் வசீகரனுடன், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற செளந்தர்யா, சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் ரஜினி தனது மகள்களுடன் சென்று ரவிசங்கர் ஜியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். பொதுவாக ரஜினி தனது இரு மகள்களுடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்லும் ஃபோட்டோ மிக அரிதாகவே வெளியாகும். அப்படி இந்த ஃபோட்டோ இருப்பதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இதனை வைரலாக்கி வருகின்றனர்.