கணவன் மனைவியாக பிக்பொஸ் தர்சனும் லொஸ்லியாவும்
Bigboss' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தமிழ்த் திரையுலகில் கால் பதித்திருக்கும் தர்ஷன் மற்றும் லொஸ்லியா ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் "கூகிள் குட்டப்பன்".
2019ம் ஆண்டு காலப்பகுதியில் 'மல்லுவூட்' எனப்படும் மலையாளத் திரையுலகில் வெளியாகி ஹிட் அடித்த "ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25" என்ற திரைப்படமே தற்போது தமிழில் "கூகுள் குட்டப்பன்" என்ற பெயரில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலக அறிமுக இயக்குனர்களான கே. எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தப் படத்தை, பிரபல இயக்குனரும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளவரான கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு நடிகர் தர்சனுக்கு அப்பா வேடமேற்று இந்தப் படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்தநிலையில், கூகிள் குட்டப்பன் படத்தில் டீசர் வெளியாகி அதிகமானோரை கவரச் செய்துள்ளது.
ஆனாலும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் தங்கை அண்ணனாக பார்த்த லொஸ்லியாவையும் தர்சனையும் கணவன் மனைவியாக அதிலும் படுக்கையறை காட்சிகளில் பார்க்கும்போது நெருடலாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்