நடிகர் ஆனந்த் பாபு பிறந்தநாள் 30-8-2021
#TamilCinema
Mugunthan Mugunthan
3 years ago
ஆனந்த் பாபு ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஆனந்த் பாபு 1985 டிசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் நடித்த படங்கள்: ஆதவன், கொண்டாட்டம், சூரியன் சந்திரன், புத்தம் புதிய பயணம், சேரன் பாண்டியன், புரியாத புதிர், பந்தம்.