மீதமான ரைஸ் இருந்தால் கூட டக்குனு இப்படி மாத்திடுங்க....

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் யாருமே சாதத்தோடு குழம்பு, பொரியல், சேர்த்து சாப்பிட விருப்பப்படுவது கிடையாது. எல்லோருமே பெரும்பாலும் வெரைட்டி ரைஸை தான் சாப்பிட விரும்புகிறார்கள். எப்போதும் சாப்பிடும் புளி சாதம், லெமன் சாதம், வெஜிடபிள் ரைஸ், தயிர் சாதம் இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக சத்துள்ளதாக வெரைட்டி டிஷ் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிம்பிளான, அதேசமயம் ஹெல்தியான வெரைட்டி சாதம் ரெசிபி உங்களுக்காக.
முதலில் இரண்டு கப் அளவு வடித்த சாதத்தை உதிரி உதிரியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வடித்து ஆற வைத்த சாதம் ஆக இருக்க வேண்டும். அது பாசுமதி அரிசியில் வடித்த சாதம் ஆக இருந்தாலும் சரி. உங்கள் வீட்டில் சாப்பாடு அரிசியில் வடித்த சாதம் ஆனாலும் சரி, அல்லது மிஞ்சிய சாப்பாடாக இருந்தாலும் சரி எந்த சாதத்தில் வேண்டுமென்றாலும் இந்த டிஷ் செய்யலாம். இந்த சாதம் அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோல் உரித்த பூண்டு பல் 10 போட்டுக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக வர மிளகாய் 4 இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு மிக்ஸி ஜாரில் இந்த இரண்டு பொருட்களும் தண்ணீர் ஊற்றாமல் அரைக்க முடியவில்லை என்றால், ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி இந்த மசாலாவை அரைத்தால் வெரைட்டி ரைஸ் நன்றாக வராது.
இப்போது வெரைட்டி ரைஸ் செய்வதற்காக அடுப்பில் ஒரு அடி கனமான, அகலமான கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், கடுகு உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக ஒரு கொத்து கறிவேப்பிலை, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு, பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி பழம் – 2 சேர்த்து தக்காளி பழத்தின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி பழம் பாதி வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 1 கைப்பிடி சேர்த்து, எண்ணெயிலேயே 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி விட வேண்டும். நாம் சேர்த்து இருக்கக்கூடிய இந்த காய் எண்ணெயில் வதக்கி வெந்தால் தான் வெரைட்டி ரைஸில் கடித்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பொடியாக வெட்டிய காய்கறிகளை போட்டு, மசாலாவுக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பூண்டு வரமிளகாய் சேர்த்து கலவையை கடாயில் போட்டு, ஒருமுறை நன்றாக கலந்துவிட வேண்டும். பூண்டின் பச்சை வாடை முழுமையாக நீங்கும் வரை வதக்கி, அதன்பின்பு எடுத்து வைத்திருக்கும் வெள்ளை சாதத்தை கடாயில் போட்டு, நன்றாக கலந்துவிட வேண்டும்.
சாதத்தில் நீங்கள் உப்பு சேர்த்து இருந்தால் சாதத்தை போட்டு பின்பு உப்பு சேர்க்க தேவையில்லை. சாதத்தில் உப்பு போட வில்லை என்றால் சாதத்திற்கு தேவையான உப்பை மேலே தூவி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். (நாம் சேர்த்த காய்கறிகள் அனைத்தும் சாதம் சேர்ப்பதற்கும் முன்பே நன்றாக வந்திருக்க வேண்டும் அதை பார்த்துக் கொள்ளுங்கள்.)
அவ்வளவு தான். சாதமும், கடாயில் நாம் வதக்கி வைத்திருக்கும் மசாலா பொருட்களும் ஒன்றாக கலந்து சூடானவுடன், இதன் மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட பரிமாறினால் சூப்பரான காய்கறிகள் சேர்ந்த ஹெல்தியான ஒரு வெரைட்டி ரைஸ் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. லன்ச் பாக்ஸ்க்கு கூட இந்த ரெசிபியை கட்டிக் கொடுக்கலாம்.



