கணவரின் இழப்பால் மனைவி செய்த விபரீத முடிவு

Prasu
4 years ago
கணவரின் இழப்பால் மனைவி செய்த விபரீத முடிவு

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த ஜக்கேரியை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி நாராயணம்மா, 45. இவரது கணவர் ஓராண்டுக்கு முன் இறந்ததால், மனமுடைந்து காணப்பட்டார். கடந்த, 28ல், அவரது மகன் முனிராஜ், 21, கூலி வேலைக்கு சென்று விடவே, வீட்டிலிருந்து எலி மருந்தை நாராயணம்மா குடித்தார். இதை கேள்விப்பட்ட முனிராஜ் நேரில் வந்து, சோப்பு மற்றும் உப்பு கலந்த கரைசலை கொடுத்து, வாந்தி எடுக்க வைத்தார். அதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. 


இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நிலை மோசமானதால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாராயணம்மா, நேற்று காலை உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4