போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் அர்மான் கோலி கைது
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் அர்மான் கோலியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) போலீ ஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அர்மான் கோலி. பாலிவுட் நடிகரான இவர், இந்தியில் நடிகர் சல்மான் கான் நடத்திய பிக்பாஸ் உள்ளிட்ட டி.வி. ஷோக்களில் பங்கேற்று பிரபலம் ஆனவர்.
சல்மான் கானுடன் பிரேம் ரத்தன் தன் பாயோ என்ற படத்திலும் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றவர். இதனிடையே, மும்பையில் உள்ள நடிகர் அர்மன் கோலி வீட்டில் கடந்த 28-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு முகமை அதிரடியாக சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் அர்மனி கோலி வீட்டில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அர்மன் கோலி கைது செய்யப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட நடிகர் கோலி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் நடிகர் கோலியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நடிகர் அர்மன் கோலி சிறையில் அடைக்கப்பட்டார்.