வலிமை படத்தின் புதிய தகவல்கள்...
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரது இசையில் சமீபத்தில் நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வலிமை படக்குழு மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.