இன்ஸ்டாகிராமில் ஒரேநாளில் 1.5 Million Followers பெற்ற நடிகை ஜோதிகா!

Prasu
3 years ago
இன்ஸ்டாகிராமில் ஒரேநாளில் 1.5 Million   Followers  பெற்ற நடிகை ஜோதிகா!

ஜோதிகா இன்ஸ்டாகிராமுக்கு வந்த ஒரே நாளில் அவருக்கு 1.5 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். கணக்கு துவங்கிய சில மணிநேரத்திலேயே அவருக்கு 1 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சூர்யாவை 3.2 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா நேற்று இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். தேசிய கொடியுடன் கம்பீரமாக இருக்கும் தன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார்.

இன்ஸ்டாகிராமுக்கு வந்த ஜோதிகாவை கணவர் சூர்யா வரவேற்றார். ஜோதிகா இன்ஸ்டாகிராமில் நான்கு பேரை மட்டுமே பின்தொடர்கிறார்.

சூர்யா, கார்த்தி, அவர்களின் சகோதரி பிருந்தா, 2டி நிறுவன கணக்கு ஆகியவற்றை பின்தொடர்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஜோதிகாவுக்கு கிடைத்திருக்கும் அமோக ஆதரவை பார்த்து பலரும் வியந்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!