படப்பிடிப்பில் உயிரிழப்பு.... இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்கு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்து,
பின்னர் புதுச்சேரியில் முடித்துவிட்டு, தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் ஐதராபாத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடந்தபோது சிறு விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இதன் காரணமாக இயக்குனர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விலங்குகள் நல விசாரணை செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.