திட்டமிட்டபடி ‘தலைவி’ திரைப்படம் ரிலீஸாவது உறுதி
அரவிந்தசாமி கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் திகதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஓடிடி நிறுவனத்திற்கும் பட குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற சிக்கல் ஏற்பட்டது
‘தலைவி’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸாக வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனையை ஓடிடியில் விற்பனை செய்யப்பட்ட நிறுவனத்திடம் தலைவி குழுவினர் பேசி சரி செய்துவிட்டதாவும் இதனை அடுத்து இந்த படத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
இதனால் திட்டமிட்டபடி ‘தலைவி’ திரைப்படம் வரும் 10ஆம் திகதி ரிலீஸாவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீசான 4 வாரங்கள் கழித்து ஓடிட்யில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது