பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை ஆரம்பித்த அட்லீ

#TamilCinema
Prabha Praneetha
3 years ago
பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை ஆரம்பித்த அட்லீ

அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படம், பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக தயாராகிறது.

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கி உள்ளது.

இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்களாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக இது தயாராகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!