10 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் யுவன் சங்கர் ராஜா

#Cinema
Prabha Praneetha
3 years ago
10 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் யுவன் சங்கர் ராஜா, அடுத்ததாக பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

தற்போது சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய 4 படங்கள் உருவாகி உள்ளன. இந்த 4 படங்களும் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

இதையடுத்து சூர்யா தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அதர்வா ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா இயக்கிய நந்தா, அவன் இவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!