இன்று முதல் கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமுலில்

Prabha Praneetha
4 years ago
இன்று முதல் கோவையில்  புதிய கட்டுப்பாடுகள் அமுலில்

கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மதுக்கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கக்கூடாது என மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கிராஸ்கட், ஒப்பணக்கார வீதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அதிகளவில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளது.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களும் மூடப்பட்டுள்ளன.

கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் பொது போக்குவரத்து தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் கூடுதல் நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பு காலை 8 மணி முதல் செயல்பட்டு வந்த ஓட்டல்கள், தேநீர்க்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க கூடுதல் நேரம் அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மதுக்கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கக்கூடாது என மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4