பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Prabha Praneetha
4 years ago
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார்மயமாக்கும் செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், அனைவரின் பொதுச்சொத்து.

அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவை தொழில்மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் அமைப்பதற்கு மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு,  மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த நிறுவனங்களின் மீது மக்களுக்கும் உரிமை இருக்கின்றது.

இதேவேளை விலைமதிப்பற்ற அரசுச் சொத்துக்கள், ஒரு சில குழுக்கள் அல்லது பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கே பணமாக்குதல் நடவடிக்கை வழிவகுக்கும்.

ஆகவே, பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுடன், இதுபோன்ற பெரிய முடிவுகளை எடுக்கும்போது மாநில அரசுகளுடன் கலந்தாலோசிப்பது சிறந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4