11 வயது சிறுவனை உயிர்பலி எடுத்த காத்தாடி

Prasu
4 years ago
11  வயது சிறுவனை உயிர்பலி எடுத்த காத்தாடி

சென்னை மதுரவாயலில் காத்தாடியை பிடிக்க சென்ற 11 வயது சிறுவன் உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை மதுரவாயல் கோவில்பட்டி கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (11 வயது). இவர் தனது தாய் தந்தை மற்றும் சகோதரனுன் அந்த பகுதியில் உள்ள வீட்டின் முதல் மாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

மாடியில் காற்றாடியை பறக்க விட்டுக் கொண்டிருந்தபோது கையிலிருந்து காத்தாடி நழுவி அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக்கொண்டது.

காத்தாடியை எடுப்பதற்காக ஓடிச் சென்ற சிறுவன் உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது வலது கை எரிந்ததை கண்ட அருகிலிருந்த ரவீந்தர் என்பவர், சிறுவனை.
மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4