தன் காதலை அம்பலப்படுத்திய செம்பருத்தி பார்வதி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'செம்பருத்தி'. இந்தத் தொடரில் நாயகியாக ஷபானா நடித்துக் கொண்டிருக்கிறார். ஷபானாவிற்கு சமூக வலைதள பக்கத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஆர்யனை ஷபானா காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாகவே தங்களுடைய காதலை வெளிப்படுத்தி வந்தனர். சமீபத்தில் இருவரும் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்த மாதிரியான புகைப்படம் ஒன்றை ஆர்யன் வெளியிட்டிருந்தார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா எனப் பலரும் கேட்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால், இருவரும் அது குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், ஷபானா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முதன்முதலாக ஆர்யனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் இருவரும் காதலிக்கிறார்கள்... விரைவில் திருமணம் நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது. செலிபிரிட்டி உட்பட பலரும் அந்தப் புகைப்படத்திற்கு கீழே தங்களுடைய வாழ்த்துகளை இந்த இளம் ஜோடிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.