தமிழகத்தில் இன்று முதல் தடை - எதற்கு தெரியுமா?

#Tamil Nadu #India #people
Yuga
4 years ago
தமிழகத்தில் இன்று முதல் தடை   - எதற்கு தெரியுமா?

சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் சுற்றுலா தலங்களிலும் இன்று(05) ஞாயிற்றுக்கிழமை பொது மக்கள் கூடுவதற்கு தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்றும் மூன்றாவது அலையை தடுப்பதற்காக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத் தலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாடு தலங்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனுமதியில்லை எனவும் அது இன்று(05) முதல் அமல் படுத்த படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் சென்னையில் இன்று மெரினாவில் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் மெரினாவுக்கு வரும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4