விருதுடன் ஜோதிகா சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்
Prasu
3 years ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்று வருகிறது
.அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகளை வென்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்நிலையில், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருது தற்போது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த விருது நடிகர் சூர்யா கைவசம் கிடைத்தது.
இது சூரரைப் போற்று படக்குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த விருது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.