Ind Vs Eng Test Day 4 -இங்கிலாந்துக்கு 368 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த இந்தியா அணி
நான்காம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா 17 ரன்களில் வெளியேற, பின்னர் களம் இறங்கிய ரஹானே டக் அவுட் ஆனார். இருவரையும் வோக்ஸ் எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேற்றினார். சற்று நிலைத்து ஆடிய கோலி 44 ரன்களில் அவுட் ஆனார். 96 பந்துகளைச் சந்தித்த கோலி மொயின் அலி பந்தில் ஒவர்டன் வசம் கேட்ச் ஆனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் அற்புதமாக விளையாடினர். இருவரையும் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். இருவரும் அரை சதம் அடித்த நிலையில், ரிஷப் பண்ட் 50 ரன்களில் அவுட் ஆனார். ரிஷப் மொயின் அலி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 72 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெளியேறினார் ஷர்துல். இதில் 7 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். தாக்கூரை இங்கிலாந்து பவுலர்கள் வீழ்த்த முடியாத நிலையில், ஒரே ஒரு ஓவர் போட்டு ரூட் வீழ்த்தினார்.
பின்னர் அடித்து ஆடிய உமேஷ் யாதவ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 1 ஃபோர் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி ஓவர்டன் பந்தில் மொயின் அலியிடம் கேட்ச் ஆனார். பும்ரா 24 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
368 ஓட்ட இலக்கை நோக்கி ஆடி வரும் இங்கிலாந்து அணி தற்போது விக்கட் இலப்பின்றி 60 ஓட்டங்களை பெற்றுள்ளது.இங்கிலாந்து அணி சார்பாக ரோரி பர்ன்ஸ் - ஹசீப் ஹமீது சிறப்பாக விளையாடி வருகின்றனர்.வெற்றியை நாளை இறுதி நாள் தீர்மானிக்கும். .