பல வருடங்களின் பின்னர் சினிமாவில் களமிறங்கும் நடிகை கனகா

Prabha Praneetha
3 years ago
பல வருடங்களின் பின்னர் சினிமாவில் களமிறங்கும் நடிகை கனகா

கரகாட்டக்காரன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை கனகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க இருக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின்  சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது மீண்டும் நடிக்க வருகிறார் கனகா. இதுகுறித்து கனகா வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. சில காரணங்களால் இடையில் நடிக்கவில்லை.

இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. தற்போதைய சினிமாவின் போக்கு மாறி இருக்கிறது. ஒப்பனை, சிகை அலங்காரம், துணி மணிகள், செருப்பு, நகை, பேசுவது, சிரிப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.

நான் ஏற்கனவே நடித்த மாதிரி நடித்தால் பழைய மாதிரி இருக்கிறது என்பார்கள். மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வேன்’' என்று பேசி உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!