பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Prabha Praneetha
4 years ago
பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் பெரியரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்தியாவில் சமூகநீதி கருத்தாக்கம் பரவ முக்கிய முன்னொடியாக விளங்கியவர் பெரியார். அவரது குருகுலத்திலிருந்துதான் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் மலர்ந்தன. அவரது எழுத்துகளும், செயல்பாடுகளும் யாராலும் செய்ய முடியாதவை. அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17 தமிழக அரசு சார்பில் சமூக நீதி தினமாக கொண்டாடப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக நீதி தினத்தன்று தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4