மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்!
’பேட்ட’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இதை படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
அதே தினத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #ValimaiDiwali என்ற பெயரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.