ஷாருக்கானின் மகளை அடுத்து ஷங்கரின் மகளும் நடிகை ஆனார்

#Actress
Nila
3 years ago
ஷாருக்கானின் மகளை அடுத்து ஷங்கரின் மகளும் நடிகை ஆனார்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் விருமன் என்ற படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை கொம்பன், குட்டிப்புலி, தேவராட்டம் படங்களின் இயக்குநர் முத்தையா இயக்கவிருக்கிறார். குடும்பப் படமாக உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். ´பருத்திவீரன்´, ´பையா´, ´நான் மகான் அல்ல´, ´பிரியாணி´ ஆகியப் படங்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா , நடிகர் கார்த்தியுடன் இணையவிருப்பதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு, ´உன் வரவு நல்வரவு ஆகுக´ என வரவேற்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!