விஷால் - ஆர்யா நடிப்பில் உருவான ''எனிமி'' ரிலீஸ் திகதி அறிவிப்பு
‘எனிமி’ திரைப்படம் ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி நடித்துள்ளார். மேலும் வில்லனாக நடித்துள்ள ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது.
இந்நிலையில், எனிமி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 14-ந் திகதி ஆயுத பூஜை தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.