பண மோசடி வழக்கில் கைதான இளம் நடிகை

Prasu
3 years ago
பண மோசடி வழக்கில் கைதான இளம் நடிகை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பிரியாணி’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீனா.

கொச்சியில் வசித்து வரும் லீனா, அங்கு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Actress Lena Arrested

பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலியான நடிகை லீனா மரியா, மருந்து நிறுவனமான ரான்பாக்சியின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட லீனா மரியா பாலை டெல்லி கோர்ட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. 5 நாட்கள் காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர்.

இவர் டெல்லியில் தொழிலதிபர்களிடம் பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது காதலி லீனா மரியாவை டெல்லியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!