தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்..

#Cinema
Prabha Praneetha
3 years ago
தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்..

தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் இளமையாகவும், எனர்ஜியுடன் நடிக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் மட்டுமே. இன்றும் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

அதுமட்டுமின்றி இவருடன் படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு தனக்கென ஒரு நிலையான மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் விஜய் வைத்துள்ளார்.

இறுதியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

தற்போது இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகி வரும் பீஸ்ட் படம் இறுதிகட்ட பணியில் உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதே ஆண்டு அவரது மற்றொரு படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் இரட்டை சந்தோசத்தில் உள்ளனர். அடுத்தாண்டு பொங்கல் மட்டுமல்ல தீபாவளியும் தளபதி தீபாவளி தான் என இப்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!