அருண் விஜய்யின் 33வது படம் குறித்த முக்கிய அப்டேட்
ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அருண் விஜய்யின் 33வது படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, சமுத்திரக்கனி, ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் பா.இரஞ்சித்தும், அப்படத்தின் நாயகன் ஆர்யாவும் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.