பயணிகள் படகுகள் விபத்து-பலர் மாயம்

#Accident
Prasu
4 years ago
பயணிகள் படகுகள் விபத்து-பலர் மாயம்

கவுகாத்தி: அஸ்ஸாமின் ஜோர்ஹாட்டில் பிரம்மபுத்திரா ஆற்றில் இன்று இரண்டு பயணிகள் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.

அஸ்ஸாமில் இன்று மாலை 4 மணியளவில் கவுகாத்தியில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள ஜோர்ஹட்டில் உள்ள நிமதி காட்டில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியது.

இதில் ஒரு பெண் உயிரிழந்தார். சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. பயணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4