பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தாயார் மரணம்!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.2008-ல், கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அவருக்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
அது அவரின் இந்தியத் திரைத்துறைக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்குரிய அங்கீகாரமாகும்.2009ல், அவர் இந்திய அரசாங்கத்தாரால் பத்மஸ்ரீ விருது பெற்றார்.பாங்காக்கில் தற்காப்புக் கலைகள் பயின்றவர்,அங்கு ஒரு தலைமைச் சமையல்காரர் ஆகவும் பணிபுரிந்தார். பிறகு மும்பை திரும்பி, தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார், பின்னர் விளம்பரத் தோற்றம் காட்டலிலும் ஈடுபட்டார். இவருடைய தாய் அருணா பாட்டியா சமீபத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அருணா பாட்டியா இன்று உயிரிழந்தார்.
'சிண்ட்ரெல்லா' என்ற படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்ஷய் குமாருக்கு அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அக்ஷய் குமார், ஷூட்டிங்கை பாதியில் நிறுத்துவிட்டு இந்தியா விரைந்துளார். அக்ஷ்ய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில். தாயார் தான் எனக்கு அனைத்துமாக இருந்தார்கள். எனக்கு தீராத வலியைக் கொடுத்துட்டு, இன்றைக்கு காலையில் அம்மா, அப்பாவோட உலகத்துக்கு சென்று விட்டார்கள் என கூறி உள்ளார்.
மேலும் எனக்கும், என் குடும்பத்திற்கும் ரசிகர்கள் உங்கள் ஒவ்வொருவரின் வேண்டுதலும் உதவியாக இருக்கும். என்னோட எல்லா நேரத்துலயும் கூட இருந்து அவங்களுக்காக வேண்டிக்கிட்ட எல்லோருக்கும் நானும் என் குடும்பமும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் " எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அக்ஷய் குமாருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுல நண்பர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.