தந்தை இறந்த வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகள்

#Suicide
Prasu
4 years ago
தந்தை இறந்த வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகள்

தந்தை இறந்த வேதனையில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வஞ்சுவாஞ்சேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜய், ஆகாஷ் என்ற மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆனந்தியின் தந்தை முஸ்தபா கடந்த 6 நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆனந்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அஜய், சாலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தனது தம்பி ஆகாஷை அழைத்துவர சென்றுள்ளார்.

அப்போது ஆனந்தி வீட்டில் இருந்த அறைக்குள் சென்று மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்ட அவரது மாமனார் தங்கவேல் சத்தமிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆனந்தியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அதன்பின் ஆனந்தி மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4