நீட்தேர்வு அச்சத்தால் மாணவன் தற்கொலை

#Death #India
Prasu
4 years ago
நீட்தேர்வு  அச்சத்தால் மாணவன் தற்கொலை

மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் பி.வி.சி. பைப் கம்பெனி ஊழியராக வேலை செய்கிறார். இவரது இளையமகன் தனுஷ்(20). இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதினார். இருமுறையும் தோல்வி அடைந்ததால் மூன்றாவது முறை படித்துக் கொண்டிருந்தார்.

Dhanush

இன்று மேட்டூர் அடுத்த மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் நீட் தேர்வு நடக்க இருந்தது. இந்த தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தனுஷ் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவர் தனுஷ் உடலுக்கு இன்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி மாலை போட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4