இந்தியாவில் புதிதாக 27,254 பேருக்கு கொரோனா தொற்று;- சுகாதார அமைச்சகம்!!

Prabha Praneetha
4 years ago
இந்தியாவில் புதிதாக 27,254 பேருக்கு கொரோனா தொற்று;- சுகாதார அமைச்சகம்!!

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,24,47,032 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 37,687 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 219 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,874 ஆக உயர்ந்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4