பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்கப் போகும் வெளிநாட்டு CONTESTANT யார்?

Keerthi
3 years ago
பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்கப் போகும் வெளிநாட்டு CONTESTANT யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான ஷோவாக ஹிட் அடித்த ஷோக்களில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் வரவிருப்பதாக ஏற்கனவே புரோமோக்கள் வெளியாகியிருந்த நிலையில் பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்கப் போகும் பிரபலங்கள் பற்றி பலரும் பேசி வருகின்றனர் . அந்த பிரபலங்களின் லிஸ்ட் இதுவா என்பது போல் பலரது பெயர்களை முன்மொழிந்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதன்படி மைனா படத்தில் நடித்த சூசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. 

குறிப்பாக இந்த சீசனில் மாற்றுப் பாலின சமூகத்தின் பிரதிநிதிகளாய் ஷகிலாவின் மகள் மிலா மற்றும் சமூக பிரபலம் நமீதா மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக ஒருபுறம் கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து எந்த போட்டியாளர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் பிக் பாஸ் சீசன் 3-வது சீசனில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் இலங்கையிலிருந்தும், முகின் ராவ் மலேசியாவிலிருந்தும் வருகைதந்து பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் பிரபல மலேசிய மாடல் வெனேஸா க்ரூஸ் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், மிஸ்டர் இந்தியா கோபிநாத், நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி விஜே பிரியங்கா, நடிகை பிரியா ராமன், மைனா நந்தினி என பலரும் இந்த பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துகொள்வார் என பேசப்பட்டது.

இதனிடையே நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

இதேபோல் நடிகர் ஜி.பி.முத்துவும் தன்னால் ஒருநாள்கூட மொபைல் இல்லாமலும், மனைவி குழந்தைகளைப் பிரிந்தும் இருக்க முடியாது என்றும்  கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால், விதார்த் நடித்த மைனா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சூசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த நமது பிரத்தியேக கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் நிச்சயமாக பங்கேற்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதுடன், மேலும் தனக்கும் அதற்கும் செட் ஆகாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!