பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

Prabha Praneetha
3 years ago
பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் ‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன், 100 உலக தலைவர்களுடன் ஐ.நா. சபையில் பேசுகிறார்.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற அமைப்பினை உருவாக்கி உள்ளன.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 24-ந் திகதி  நடக்கிறது.

இந்த உச்சி மாநாட்டின் சிறப்பம்சம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் போராடிக்கொண்டிருக்கிற இந்த தருணத்தில் முதன் முதலாக தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்கிறார்கள் என்பதுதான்.

இந்த உச்சி மாநாட்டில், உலகளாவிய சவால்கள், இந்தோ பசிபிக் விவகாரம் உள்பட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.