குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கணவன் மனைவி

#Accident #India #Tamil People
Prasu
4 years ago
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கணவன் மனைவி

வறுமையின் காரணமாகவும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவர் தங்கள் உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து விட்டனர். இதில் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவதியுற்று வருகின்றனர். திருச்சி தென்னூர் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

நடராஜன்(51), மகாலட்சுமி(49) தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்து வந்ததாகவும், மேலும் வறுமையின் காரணமாகவும் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருவரும் தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளனர். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து உடனே 108க்கு அழைப்பு விடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கே 90 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அவதியுற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4