சின்னக்கலைவாணர் விவேக்கின் கடைசி படம் அரண்மனை, குஷ்புவின் டுவிட், குதூகலத்தில் ஆரியாவின் ரசிகர்கள்.
குஷ்பு அக்கா தனது உடல் இடையை குறைத்த பின்னர், இப்போ தனது கணவரின் படத்தைப்பற்றி பேசி தூள் கிழப்பி உள்ளார். அது டுவிட்டரில் ஒரு பிடி பிடித்துள்ளது.
குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், அரண்மனை 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஆமா,,,
அனைவரும் எதிர்பார்பிற்கும் ஏற்ப அடுத்த மாதம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
குடும்ப, பொழுதுபோக்கு, காமெடி, பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ள அரண்மனை 3 பண்டிகை தமாக்காவாக வெளியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அப்புறம்...
ரசிகர்கள் வாழ்த்து குஷ்புவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அரண்மனை 3 வெற்றி பெற படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் சிலர் படத்தை ஆயுத பூஜைக்கு முன் நவராத்திரி காலத்திலேயே ரிலீஸ் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரீலீஸ் தேதி இது தான் இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக அரண்மனை 3 படத்தை அக்டோபர் 14 ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓக்கே...
முதல் முறையாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் உடன், குஷ்புவின் அவினி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை வெளியிட உள்ளதாக குஷ்பு இன்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
படத்தின் புதிய போஸ்டருடன் இந்த தகவலை ரெட் ஜெயின்ட் மூவிசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மீண்டும் திமுக.,வில் குஷ்பு.,வா உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ், அரண்மனை 3 படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்ததை அடுத்து, மீண்டும் திமுக.,வில் இணைய போகிறீர்களா என குஷ்புவிடம் பலரம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திமுக.,வுடன் இணைய உள்ளதால் தான் பாஜக உடனான செயல்பாடுகளை குறைத்துக் கொண்டு, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறீர்களா என்றும் சிலர் கேட்டுள்ளனர்.
டிரெண்டிங்கில் அரண்மனை 3 ரெட் ஜெயின்ட் மூவிஸ் உடன் இணைந்து அரண்மனை 3 படத்தை வெளியிட உள்ளதாக குஷ்பு அறிவித்த சில நிமிடங்களிலிலேயே அரண்மனை 3 என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது.
இதில் ஏராளமானோர் அரசியல் ரீதியாக குஷ்புவிடம் கேள்வி கேட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஆர்யா தான் பேயா இந்த படத்தில் ஆர்யா பேய் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆர்யா முதல் முறையாக பேய் ரோலில் நடிக்கும் படம் இது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.
இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதற்கிடையில் அரண்மனை 3 படத்தில் ஆர்யா - ராஷி கன்னாவின் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி, படுவைரலாகின. விவேக்கின் கடைசி படம் இந்த படத்தில் சுந்தர்.சி உடன் விவேக், யோகிபாபு, மனோ பாலா, சாக்ஷி அகர்வால், சம்பத், வேல் ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகர் விவேக் முழுவதுமாக நடித்து முடித்த கடைசி படம் இது தான்.
இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார்.