சண் தொலைக்காட்சியில், சுப்பர் சிங்கர் கலைஞர்களை மகிழ்விக்க காத்திருக்கும் நம்ம இளையராஜா ...
தமிழ் பிரபல தொலைக்காட்ச்சியான சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இணையாக சன் டிவி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது.
அடுத்ததாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இணையாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த சன் டிவி திட்டமிட்டுள்ளதாகவும் அதில் இளையராஜா கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி தொடர்ந்தால் கட்டாயம் இதேபோல மற்ற தொலைக்காட்ச்சிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு பின்னடைவு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
எது எதுவாக இருப்பினும் இளையரஜாவின் ரசிக கண்மணிகளுக்கு ஒரு விருந்துதான்.