உலக அளவில் பிரபலமான 100 பேர் பட்டியலில் மோடி, மம்தா!

Prabha Praneetha
3 years ago
உலக அளவில் பிரபலமான 100 பேர் பட்டியலில் மோடி, மம்தா!

டைம்ஸ் ஊடகம் எடுத்த கருத்து கணிப்பில் உலக அளவில் பிரபலமான 100 பேர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெயர்கள் இடம் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

டைம்ஸ் என்ற ஊடகம் சமீபத்தில் 2021 ஆம் ஆண்டில் உலக அளவில் புகழ் பெற்றவர்கள் என்ற பட்டியலை எடுத்தது.   இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பிரின்ஸ் ஹாரிஸ் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும் இந்த பட்டியலில் உள்ளார். இந்த நிலையில் இந்தப் பட்டியல் 100 பேர்கள் உள்ள பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது

அதேபோல் தடுப்பூசி கண்டுபிடித்த சீரம் இன்ஸ்டியூட் இந்தியாவின் சிஇஓ பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உலக அளவில் பிரபலமானவர்களின் பட்டியலில் ஏற்கனவே பிரதமர் நரேந்த மோடியின் பெயர் கடந்த 2014, 2015, 2017, 2020 ஆகிய ஆண்டுகளிலும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது