இன்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் 5 பிரபலங்கள்

Prabha Praneetha
3 years ago
இன்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் 5 பிரபலங்கள்

 பொறியாளர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்தியாவில் தேசிய பொறியாளர் தினமாக செப்டம்பர் 15 அனுசரிக்கப்படுகிறது . தமிழ் சினிமாவில் பல பொறியாளர் பட்டதாரிகள் உள்ளனர். 

மேலும் பலர் சினிமா மீதான ஆர்வத்தில் தங்கள் தொழில்களை சினிமாத்துறைக்கு மாற்றியுள்ளனர். 

அவர்களில் 5  பிரபலங்களை பற்றி பார்ப்போம் 

கார்த்தி: இவர் மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் இளைய மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.

நடிகர் கார்த்தி சென்னை கிரசன்ட் எஞ்சினியரிங் காலேஜில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து உள்ளார். 

மேலும் இதில் முதுகலை பட்டப்படிப்பும்  முடித்துள்ளார். சினிமாவிற்கு வரும் முன் இவர் மாதாந்திர சம்பளத்திற்கு பணிபுரிந்தவர்.

பின் நடிப்பு மீதான ஆர்வத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சி ஜே ஜே இன்ஜினியரிங் கல்லூரி பி.இ முடித்துள்ளார். இவர் கல்லூரி நாட்களில்  மிமிக்ரி மற்றும் ஸ்டேண்டப் நகைச்சுவைகளில் ஆர்வம் காட்டி வந்தவர்.

அதன் மூலம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சினிமாவில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.
 
மாதவன்: நடிகர் மாதவன் சென்னை ஐஐடி-யில் மெக்கானிக் இன்ஜினியர்  இளங்கலை பட்டம் பெற்றார். ஆரம்ப காலத்தில் இவர் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தவர். அதுவே இவரை சினிமா துறைக்கு வருவதற்கு தூண்டுகோலாக இருந்தது.

இயக்குனர் மணிரத்னம்  இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் ‘மேடி’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுவார்.

பிரசன்னா: நடிகர் பிரசன்னா திருச்சி உள்ள சாரநாத் கல்லூரி EEE முடித்தவர். சுசி கணேசனின் இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமானார்.

பின்னர் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் மேலும் நடிகை சினேகாவை காதலித்து மணந்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன்: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் புதுக்கோட்டை மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து உள்ளார்.  

இவர் இயக்கத்தில் வெளியான  மின்னலே திரைப்படம் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வாழ்க்கை பற்றியது. மேலும் இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  

அதன்பிறகு இவர் சூர்யா, கமல் மற்றும் பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!