இன்றைய வேத வசனம்17.8.2021

#Prayer #Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம்17.8.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நான் சிறுவனாக இருந்த சமயத்தில், நீ சின்னப் பையன் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் பெருந்தீனி பழக்கம் இருக்கவே கூடாது என்று சொல்லி என் தாயார் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.

இப்படிப்பட்ட பழக்கத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய உணவு விஷயத்தில் கடைபிடிக்க வேண்டும்.

கண்களில் காண்கிற அல்லது பிள்ளைகள் கேட்கிற எதை வேண்டுமானாலும் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கக் கூடாது.

அதின் தீமைகளை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளுக்கு வியாதியை உண்டாக்குகிறீர்கள் என்று அர்த்தம்!

உணவு விஷயத்தில் கட்டாயமாக ஒரு கட்டுப்பாடு இருக்க தான் வேண்டும்! நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அது சரீரத்திற்கு நல்லது..

சில சமயங்களில் ருசி பார்த்து சில பலகாரங்களை சாப்பிடுகிறோம் அது தவறு கிடையாது! ஆனால் அதையே பழக்கமாக்கி கொள்ளக்கூடாது!

நம்முடைய சரீரத்தின் மீது நமக்கு அக்கறை இல்லாவிட்டால் கர்த்தர் நமக்கு சுகம் கொடுக்க முடியாது!
சிலர் ஒரு நாளைக்கு 4 வேளை சாப்பிடுவார்கள் அப்படிப்பட்டவர்களுடைய கழுத்துக்கு கத்தியைத்தான் வைக்க வேண்டும்!! மூன்று வேளை சாப்பாடே நமக்கு அதிகம் தான்.

உங்களுக்கு நோய் வருவதை போல இருக்கிறது! உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது! அல்லது இரத்த அழுத்தம் இருக்கிறது! கவனமாக இருங்கள் என்று டாக்டர்கள் சொல்லி விட்டால் அதற்குப் பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

நம்முடைய சரீரம் கர்த்தர் வாசம் செய்யும் ஆலயம் அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய தலை மேல் விழுந்த கடமை!! என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்!!

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரி 3:16)

நம்முடைய சரீரம் ஆரோக்கியமாக இருப்பதற்கு குனிந்து நிமிர்ந்து நன்றாக வேலை செய்ய வேண்டும்!
நம்முடைய சரீர ஆரோக்கியத்தைக் குறித்து நாம் கவனமாக இருந்தால் தான், தேவனும் நம் மீது கவனமாக இருப்பார். காரணம் நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயம்..

நம்முடைய சரீரத்தில் தான் ஆவியானவர் இருந்து செயல்படுகிறார்!! ஆகவே கர்த்தர் நமக்கு கொடுத்த இந்த சரீரத்தை நாம் கெடுத்து விடக் கூடாது..

கொரிந்தியர் 3:17
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

ஆமென்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!