வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

Prabha Praneetha
3 years ago
வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். 

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியிட்ட படக்குழு, அதே பாணியில் வலிமை படத்தின் டீசரையும் விரைவில் வெளியிட உள்ளதாம். 

அதன்படி இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த டீசர் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!