பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான கிருபா காலமானார்

#TamilCinema
Prasu
3 years ago
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான கிருபா காலமானார்

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகியவை இவரின் முக்கிய படைப்புகளாகப் பார்க்கப்படுகிறது.

இவர் எழுதிய கன்னி எனும் புதினம், 2007 ஆம் ஆண்டில் சிறந்த புதினம் என்ற விருதைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை ஆகிய படங்களில் பாடல்களை எழுதியுள்ள இவர், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி இருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா, நேற்று இரவு காலமானார். பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.