இன்றைய வேதவசனம் (18.9.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
என் நெருங்கிய நண்பர் ஒருநாள் ஒரு சிறுவனின் கையில் ஒரு சிட்டுக்குருவியைப் பார்த்தார்.
பாவம் அந்தச் சிறு பறவை! அவன் கையிலிருந்து தப்ப முடியாமல் அது நடுங்கிக்கொண்டிருந்தது.
அதை விட்டுவிடும்படி என் நண்பர் அவனிடம் கெஞ்சினார். அவனோ இன்னும் அழுத்தமாக அந்தச் சிறு பறவையைப் பிடித்துக் கையில் கொண்டான்.
நான் மூன்று மணி நேரம் இதை விரட்டிப் பிடித்திருக்கிறேன் ட. இதை விட முடியாது. என்று அவன் மறுத்துவிட்டான்.
கடைசியாக அந்தப் பறவைக்குப் பதிலாக அவனுக்குப் பணம் தருவதாக என் நண்பர் கூறினார். அந்தப் பறவையை மீட்பதற்காக அவர் அதிகப் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.
அவர் அந்தச் சிட்டுக்குருவியைத் தனது கையில் வாங்கினார். அந்தச் சிறுவன் அதை இறுக்கமாகப் பிடித்திருந்தபடியால், சிறிது நேரத்துக்கு அதனால் தனது இறக்கையை விரிக்கமுடியவில்லை.
பிறகு அது தன் இறக்கையை விரித்து ஆகாயத்தில் பறந்துசென்றது அவருக்கு நன்றி சொல்லுவதுபோல அது குரலெழுப்பியபடியே பறந்தது.
மீட்பு என்றால் கிரயம் செலுத்தி, மீட்டு, பிறகு விடுவிப்பதாகும். பாவத்தின் சங்கிலியை முறித்துப் பாவியை விடுவிக்கும்படியாகக் கிறிஸ்து வந்தார்.
தமது இரத்தத்தைக் கிரயமாகச் செலுத்தி அவர் பாவியை விடுவித்தார்
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. - (பேதுரு 1:18-19)
ஆமென்